ADDED : டிச 04, 2025 01:06 AM
சத்திரப்பட்டி: பழநி கோம்பைபட்டி பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கோம்பைபட்டியில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி அருகே விளை நிலங்களில் யானை உலாவருகிறது . அவற்றில் மா, கொய்யா, தென்னை,கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளது. இரவில் உலா வரும் ஒற்றை யானை வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.


