/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள் சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்

நடுத்தெருவில் மின் கம்பம்
எம்.ஆறுமுகம், தேசியவாத காங்., மாவட்ட தலைவர், சங்கு பிள்ளைபுதுார்: சங்குபிள்ளைபுதுாரில் தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் வாகனங்களை செல்ல சிரமமாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். தரை மேல் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும். கொசு தொல்லையை போக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். தேவையான இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
ரகுபதி, மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர், ஏ.பி.காலனி: துார்வாரப்பட்ட சாக்கடையில் உள்ள கழிவுகள் மேலே கொட்டப்பட்டு அதனை எடுக்க தாமதமாவதால் மீண்டும் அதற்குள் விழுகிறது. கூடுதல் பணியாளர்களை நியமித்து சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பணிக்காக தெருக்களில் தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
செல்வராஜ், கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக கே.கே. நகரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். சாக்கடைகள் துார்வாரப்படுகிறது. தெருக்களில் எல் .இ .டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கே.கே நகர் பகுதியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேவையான இடங்களில் சாக்கடைகள் அமைக்கப்படும் என்றார்.