தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாமதம்

தாமதம்

தாமதம்


ADDED : ஆக 12, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு கிடைப்பதில்... * முன்பணம் செலுத்தி மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலம்

குஜிலியம்பாறை, ஆக.13

திண்டுக்கல் மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து அதற்கான டெபாசிட் செலுத்திய விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஆவதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

2025ல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்தனர். இதனை சீனியாரிட்டி அடிப்படையில் தான் வழங்க வேண்டும் என்பதால் காலதாமதம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மின் இணைப்பை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 2025 டிச.,ல் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான தட்கல் திட்டத்தை அப்போதைய அரசு அறிவித்தது. அதன்படி 5 எச்.பி., மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.5 எச்.பி., மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம் டெபாசிட் செலுத்தினால் 15ல் இருந்து 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பை நம்பி குஜிலியம்பாறை, வேடசந்துார் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெபாசிட் தொகையை செலுத்தினர். இவர்களில் பலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் இத்தொகையை செலுத்தினர். இதே திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 30 ஆயிரம் பேர் மின் இணைப்பு கேட்டு விண்ணப்ப மனு மட்டும் அளித்துள்ளனர்.

பணத்தை செலுத்தியாவது மின் இணைப்பை பெற்று விவசாய பணிகளை கவனிக்கலாம்; கால்நடைகளை நன்கு வளர்க்கலாம் என்ற ஆர்வத்துடன் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பணம் செலுத்தி ஏறத்தாழ ஒரு வருடம் ஆன நிலையில் இதுவரையில் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விவசாய பணிகளும் மேற்கொள்ள முடியாமல் வட்டிப் பணத்தையும் செலுத்த முடியாமல் விவசாயிகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர்.

எனவே தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது:

தமிழகத்தில் மின் உற்பத்தி கூடுதலாக உள்ளது. காற்றாலை, சோலார் மின் உற்பத்தி மூலமும் கூடுதல் மின்சக்தி கிடைக்கிறது. இருந்தும் மின் இணைப்பு கேட்டோர் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால் சீனியாரிட்டி அடிப்படையில் கொடுக்க காலதாமதம் ஆனது. இதனால் கடந்த ஆட்சியில் தட்கல் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து டெபாசிட் தொகை செலுத்த கோரினர். இதனை நம்பி விவசாயிகள் பலரும் பணம் செலுத்திய நிலையில் இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை. கேட்டால் அரசிடம் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்கின்றனர்.

கடும் வறட்சி நீடிக்கும் நிலையில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கடனை வாங்கி டெபாசிட் செலுத்தி மின் இணைப்பை பெறலாம் என நினைத்தனர். ஆனால் இன்னும் மின் இணைப்பு வழங்கவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டி வருகின்றனர்.

எனவே தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பை வழங்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us