ADDED : ஜன 12, 2024 01:04 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் ரூ.99 லட்சத்தில் டிஜிட்டல் பெயர் பலகைகள் அமைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி 51 எல்.இ.டி.,விக்கள் வந்தது. இதை சென்னை முதன்மை தலைமை சமிக்கை தகவல் தொடர்பு பொறியாளர் சாந்திராம் திறந்து வைத்தார். மூத்த கோட்ட தகவல் தொடர்பு பொறியாளர் ராம்பிரசாத், ஸ்டேஷனர் மேனேஜர் கோவிந்தராஜ்,கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


