ADDED : செப் 17, 2025 03:25 AM
பழநி : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினரின் திண்டுக்கல் மாவட்ட ஐந்தாவது மாநாடு பழநியில் நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து மாநாடு நடக்கும் மின்வாரிய திடல் வரை மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில் ஊர்வலமாக வந்தனர். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி, மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டனர்.