ADDED : செப் 02, 2025 06:24 AM
திண்டுக்கல் : அய்யலூர் பகுதியில் உள்ள காப்புக்காடுகளின் அருகில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வனத்துறையினர் செயல்படுகின்றனர்.
அப்பகுதியில் தேவாங்குகள் சரணாலயம் அமைக்க இருப்பதாக கூறி மலைவாழ் மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும் வனத்துறையினரை தடுக்க கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் குடியுரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாநில அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன் தலைமை வகித்தார். அய்யலுாரை அடுத்த பஞ்சதங்கி புதுார், காக்கயம்பட்டி கோம்பை உள்ளிட்ட கிராம மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.