/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
ADDED : மார் 16, 2025 06:38 AM
குஜிலியம்பாறை; ஆலம்பாடி  சி.சி. குவாரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரமேஷ் 32.   ஜி.எஸ்., இன்ப்ராடெக் கான்ட்ராக்ட் கம்பெனியில்  பொலிரோ பிக் அப் வண்டி மூலம் டீசல் போடும் வேலை செய்து வந்தார். பணி முடிந்து குஜிலியம்பாறை மனமகிழ் மன்றத்திற்கு வந்த அவரை உரிமையாளர்கள் சந்தோஷ், கோபிநாத், மேலாளர் மனோஜ் , ஊழியர்கள் முருகேசன், லட்சுமணன் ஆகியோர்  கம்பெனிக்கு   காரில் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும்  எத்தனை நாளாக டீசல் திருடினாய் என கூறி ரமேஷை  தாக்கினர்.  அலைபேசியை  வாங்கி கொண்டு கரூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டனர்.   திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தாக்கிய  5 பேர் மீது  குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.


