/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சிக்கான மானிய நிதி குறைப்பால்... தத்தளிப்பு ; ஈமக்கிரியை நிதியை வழங்க முடியாது தவிப்புஊராட்சிக்கான மானிய நிதி குறைப்பால்... தத்தளிப்பு ; ஈமக்கிரியை நிதியை வழங்க முடியாது தவிப்பு
ஊராட்சிக்கான மானிய நிதி குறைப்பால்... தத்தளிப்பு ; ஈமக்கிரியை நிதியை வழங்க முடியாது தவிப்பு
ஊராட்சிக்கான மானிய நிதி குறைப்பால்... தத்தளிப்பு ; ஈமக்கிரியை நிதியை வழங்க முடியாது தவிப்பு
ஊராட்சிக்கான மானிய நிதி குறைப்பால்... தத்தளிப்பு ; ஈமக்கிரியை நிதியை வழங்க முடியாது தவிப்பு
ADDED : அக் 23, 2025 04:16 AM

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 12,525  ஊராட்சிகள் உள்ளன. இந்த  ஊராட்சிகளின் நலன் கருதி  மாநில அரசு சார்பில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில்  மாநில நிதிக்குழு மானிய நிதியை வழங்கி வருகிறது.
இந்த நிதியில் இருந்து தான் குடிநீர் மின் மோட்டார், பைப் லைன், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கவனிக்க வேண்டும்.
இது மட்டுமின்றி ஊராட்சிகளில் உள்ள ஆதி திராவிடர்களில்  வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் இறப்பவர்களுக்கான ஈமக்கிரியை   நிதி தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் என தொடர் மழை காலங்களில் பிளீச்சிங் பவுடர் போடுதல், சுற்றுப்பகுதியை கழிவுநீர் தேங்காமல் சுத்தப்படுத்துதல்  போன்ற பணிகளை   இந்த மானிய நிதியில் இருந்து தான் செயல்படுத்த வேண்டும். ஊராட்சி  தலைவர்கள் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில்  மாநில நிதிக்குழு மானிய நிதி கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைத்து விட்டனர்.
அதாவது மக்கள் தொகையைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை  வழங்குகின்றனர்.  இதனால் நிதி  கையிருப்பு இல்லாமல் எதை செய்வது என்ற கவலையில் உள்ளதாகவும்,  ஆதிதிராவிடர் மக்களுக்கான ஈமக்கிரியை நிதியை  கூட முறையாக வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாகவும் குமுறல் எழுந்துள்ளது.


