ADDED : ஜன 09, 2024 06:26 AM
வேடசந்துார், : வேடசந்துார் மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியை நாடார் உறவின் முறையினர் பட்டா உள்ளதாக கூறி கல் நட்டனர். இதை தடுத்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்தநிலையில் மின் ஊழியர்களை மனம் வருந்தும்படி பேசிய வேடசந்துார் தாசில்தாரை கண்டித்து, மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.


