/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநியில் பழச்சாறு ஆலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்பழநியில் பழச்சாறு ஆலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
பழநியில் பழச்சாறு ஆலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
பழநியில் பழச்சாறு ஆலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
பழநியில் பழச்சாறு ஆலை கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : பிப் 11, 2024 01:21 AM
திண்டுக்கல்: பழநியில் பழச் சாறு ஆலை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வேளாண் நிதி நிலை அறிக்கை தயாரிப்புத் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் நிதி நிலை அறிக்கை தயாரிப்புத் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், செயலர் ராமசாமி கூறியதாவது: தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைசேர்ந்த விவசாயிகள் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்ட 58 கிராம கால்வாய்த் திட்டத்தின் 1400 மீட்டர் நீளமான தொட்டிப் பாலம் அருகில் செயல்பட்ட கல்குவாரியை நிரந்தமாக மூட வேண்டும். வாய்க்காலில் 300 கன அடி வீதம் தண்ணீர் செல்லும் வகையில் கரைகளை உயர்த்த வேண்டும். பழநியில் பழச் சாறு ஆலை அமைக்க வேண்டும். கண் வலிக் கிழங்கு விதை, முருங்கைப் பூ ஆகியவற்றிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்க வேளாண் தொழில் முனைப்பு மையம் அமைக்க வேண்டும். பழநி பச்சையாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினர்.