ADDED : மே 03, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஓட்டு எண்ணிக்கை நாளை (மே 4) நடப்பதையொட்டி பொதுமக்களுக்கு அமைதி, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகளின் வழியே சென்று பஸ் ஸ்டாண்டில் முடிந்தது.
தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில் பேகம்பூர் முதல் மேட்டுப்பட்டி, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் முதல் எம்.வி.எம்.,மகளிர் கல்லுாரி வரை கொடி அணிவகுப்பு நடந்தது.
இதுபோல் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
