/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பிரையன்ட் பூங்காவில் மலர் நாற்று நடவுபிரையன்ட் பூங்காவில் மலர் நாற்று நடவு
பிரையன்ட் பூங்காவில் மலர் நாற்று நடவு
பிரையன்ட் பூங்காவில் மலர் நாற்று நடவு
பிரையன்ட் பூங்காவில் மலர் நாற்று நடவு
ADDED : பிப் 25, 2024 05:39 AM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சிக்காக மூன்றாம் கட்ட மலர் நாற்று நடவு செய்யப்பட்டது.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடக்கிறது.
ஏப்., மே மாதங்களில் லட்சக்கணக்கான பயணிகள் இப்பூங்காவிலுள்ள பூக்களை ரசித்து மகிழ்வர்.
இந்நிலையில் 61 வது மலர் கண்காட்சிக்காக சில மாதங்களாக மலர் படுகைகள் தயார் செய்யப்பட்டன.
இரு கட்டங்களாக மலர் நாற்று நடவு பணி நடந்த நிலையில் தற்போது வீரிய ரக மலர் நாற்றுக்கள் மூன்றாம் கட்டமாக நடவு செய்யப்பட்டன. இதில் கேலண்டுல்லா, பாப்பி, ஆப்பிரிக்கன் மேரி கோல்டு, சினியா, பேன்சி, பெட்டுனியா, சால்வியா, ஸ்டார்ப்ளக்ஸ், கஜேனியா உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்றுகள் நடப்பட்டன.
மூன்று கட்டங்களாக மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை ஏப்., மே மாதங்களில் நன்கு பூத்துக் குலுங்கும். இதற்கான ஆயத்த பணிகளை தோட்டக்கலைத் துறையினர் செய்து வருகின்றனர்.