Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து.....

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து.....

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து.....

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து.....

ADDED : பிப் 12, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

சாணார்பட்டி சிலுவத்துார் ஊராட்சி வங்கமனுாத்து கிராமத்தில் துாய்மை பாரத இயக்கத்தின் மூலம் கட்டப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கே. பிரகாஷ், சிலுவத்துார்.------

பெயர்பலகையை மறைத்த செடிகள்

எரியோடு குரும்பபட்டியிலிருந்து அய்யலுார் செல்லும் ரோட்டில் துாங்கணம்பட்டி கிராமம் அருகில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை வழிகாட்டி பெயர் பலகையை முட்புதர்கள் மறைத்துள்ளது. இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர், எரியோடு.-------

தொற்று பரப்பும் கழிவுநீர்

திண்டுக்கல் கொட்டபட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியும் நடக்கிறது. கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.சகாயராஜ், திண்டுக்கல்.-------

சேதமான குழாயால் வீணாகும் தண்ணீர்

ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் ஐ.ஓ.பி. வங்கி முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் எப்போதும் செல்வதால் அப்பகுதி முழுவதும் சகதியாக மாறியது. சேதமான பகுதியை சரி செய்ய வேண்டும். தம்பி ராஜாங்கம், புதுச்சத்திரம்.-------

கற்களால் தடுமாறும் மக்கள்

புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லுார் அருந்ததியர் காலனியில் அமைக்கப்பட்ட ரோடு கற்கள் சிதறி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. கற்கள் சிதறி கிடப்பதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் . கி.ரங்கசாமி, பொம்மநல்லுார்.--------

சேதமான மின்கம்பத்தால் அச்சம்

ம.மூ.கோவிலுார் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் எதிரில் மிகவும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இவ்வழியில் தினமும் மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். தேமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன், ம.மூ.கோவிலுார்.----------

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை மலைபோல் குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பல்வேறு பகுதியிலிருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பையை அகற்ற வேண்டும். ஜனனி,திண்டுக்கல்.

.....................................................

----------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us