ADDED : அக் 06, 2025 05:42 AM
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் அரவக்குறிச்சி நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்வர் சின்னையா 60.
இவரது மனைவி ரஞ்சிதா 58, பேத்திகள் தாரணிகா 7, மவுனிகா 4. நால்வரும் நேற்று மதியம் டூவீலரில் திருமலைக்கேணி உறவினர் வீட்டில் இருந்து ஊர் திரும்பி சென்றனர். செங்குறிச்சி குருநாதபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தாரணிகா இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


