/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 05:06 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் , உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் ஆர்பாட்டம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ,உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தசாரதி, சலோத்ராஜா தலைமை வகித்தனர். நிர்வாகிகள் சண்முகவேல், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். துரைராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் பாலாஜி, ராஜரத்தினம் ,நிர்வாகிகள் சீனிவாசன், மணிகண்டன், பூமிபாலன், ஜோதிமுருகன் பேசினர். நிர்வாகி பெலிக்ஸ் நன்றி கூறினார்.


