/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; ஒரு மணி நேரம் பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; ஒரு மணி நேரம் பெய்ததால் ரோடுகளில் வெள்ளம்
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; ஒரு மணி நேரம் பெய்ததால் ரோடுகளில் வெள்ளம்
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; ஒரு மணி நேரம் பெய்ததால் ரோடுகளில் வெள்ளம்
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை; ஒரு மணி நேரம் பெய்ததால் ரோடுகளில் வெள்ளம்
ADDED : செப் 17, 2025 03:36 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று விடாது ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல்லில் சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் நல்ல வெயில் அடித்தாலும் மதியம் 3 :00மணிக்கு மேல் லேசான துாறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இரவு வரை லேசான துாறல் நீடித்தது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். திருச்சி ரோடு, சந்தைரோடு, சாலை ரோடு, பழநி பைபாஸ், கடைவீதி, ஆர்.எம்.காலனி, நாகல்நகர் ,நத்தம் ரோடு என பல்வேறு இடங்களிலும் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.
மதுரை ரோடு நகர் பகுதிகளில் முட்டியளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இரு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது .
நாகல்நகர் பாரதிபுரம்லஎம்.வி.எம்., நகர், ஒய்.எம்.ஆர்., பட்டி கோபால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக விவேகானந்தா நகர் பகுதியில் பல மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியினால் முழுங்கால் அளவில் கழிவுநீர் தேங்கியது.