/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நெடுஞ்சாலையில் செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட் நெடுஞ்சாலையில் செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்
நெடுஞ்சாலையில் செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்
நெடுஞ்சாலையில் செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்
நெடுஞ்சாலையில் செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்
ADDED : செப் 04, 2025 04:35 AM

வேடசந்துார்: வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லை பகுதியான ரங்கமலை கணவாய் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் செக்போஸ்ட் செயல்பாடற்று கிடக்கிறது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை வேடசந்துார் கல்வார்பட்டி கனவாய் வழியாக செல்கிறது. இங்கு மாவட்ட எல்லை பகுதி கனவாய் அருகே போலீசார் செக் போஸ்ட் அமைத்து கண்காணித்து வந்தனர். 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்ததால் , இப்பகுதி கண்காணிக்கப்படும் பகுதியாக விளங்கியது. இதனால் இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் மட்டுமின்றி வாகனங்களில் மண்,மணல் கடத்தலும் நடைபெறவில்லை. தற்போது ஆறு மாதங்களுக்கும் மேலாக செக் போஸ்ட் பயன்பாடற்ற நிலையில் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் இவ் வழித்தடத்தில் கடத்தல் பேர்வழிகள் அச்சமின்றி பயணிக்கின்றனர்.
சமீப காலமாக இப்பகுதியில் இரவு நேரங்களில் மண் திருட்டு வாகனங்கள் தொடர்ந்து செல்வதாக புகார் எழுகிறது. வேடசந்துார் தாலுகா பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட எல்லை பகுதியான
கல்வார்பட்டி செக்போஸ்ட்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடத்தல் குறையும் என்.செல்வராஜ், வியாபாரி, கல்வார்பட்டி : மாவட்ட எல்லையில் கணவாய் பகுதி அருகே செக் போஸ்ட் உள்ளதால் டூவீலர்களில் செல்வோர் அச்சமின்றி சென்று வந்தனர். சமீப காலமாக என்ன காரணமோ தெரியவில்லை மூடப்பட்டுள்ளது. இதை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இப்பகுதி வழியே நடக்கும் மணல் கடத்தல் உள்ளிட்டவை தடுக்கப்படும் .
செயல்பாட்டிற்கு கொண்டு வாருங்க எஸ்.பெரியசாமி, விவசாயி, கல்வார்பட்டி : எங்களது தோட்டத்தை ஒட்டித்தான் செக்போஸ்ட் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு செக் போஸ்ட் அமைத்த போது கட்டட வசதி, தண்ணீர் வசதி என அனைத்தும் செய்து கொடுத்தோம். செக்போஸ்ட் செயல்பாட்டில் இருந்தபோது நல்ல முறையில் இருந்தது. இந்த செக்போஸ்ட் மூடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் வர உள்ள நேரத்தில் செக்போஸ்ட்டைமீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.