Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நடு ரோட்டில் உள்ள மின் கம்பத்தால் இடையூறு

நடு ரோட்டில் உள்ள மின் கம்பத்தால் இடையூறு

நடு ரோட்டில் உள்ள மின் கம்பத்தால் இடையூறு

நடு ரோட்டில் உள்ள மின் கம்பத்தால் இடையூறு

ADDED : பிப் 02, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
வீணாகும் குடிநீர்

மோர்பட்டி கொல்லப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் தொட்டியில் திருகு அடைப்பானில் கசிவு ஏற்பட்டு பெருமளவில் நீர் வீணாகிறது.குடி நீர் தட்டுப்பாடு பிரச்னையில் இது போன்று வீணாவதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், அய்யலுார்.

...........--------சேதமடைந்த ரோடால் சிரமம்

பொரூளூரில் இருந்து குப்பாயிவலசுக்கு செல்லும் தார்ரோடு பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதோடு இரு சக்கர வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளதால் பெரும் பாதிப்பும் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், பொருளூர்.

.................---------கடைவீதி நுழைவில் ரோடு

வேடசந்துார் - வடமதுரை ரோடு கடைவீதி நுழைவுப் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்த நிலையில் ,மின் கம்பம் நடுரோட்டில் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது . மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா இளவரசன், வேடசந்துார்.

.................---------ரோட்டில் சாக்கடை மண்

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் சாக்கடை துார்வாரி மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது . இந்த மண் சிதறி மீண்டும் சாக்கடையில் விழுகிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது .முத்துச்சாமி, திண்டுக்கல்.

...................---------தெருவில் குப்பை குவியல்

திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் குப்பை கொட்டி பல நாட்களாக அப்படியே கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ரோடெல்லாம் சிதறி கிடக்கிறது .பாதிப்பு ஏற்படும் முன்பு குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார் கோதாவரி தெரு.

.....................---------கூட்டத்தால் சிரமம்

பழநி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் ஒரே ஊழியரால் மட்டும் கணினியில் சேவை நடைபெறுகிறது .இதனால் கூட்டம் அலைமோதுகிறது . தினந்தோறும் கூட்டம் அதிகமாகவே உள்ளது வயதானவர்கள் சிரமப்படுகின்றனர் . கவுதம்,பழநி.

......................

கழிப்பறைக்கு பூட்டு

பழநி அருகே சிந்தலவாடம் பட்டி ஊராட்சி ராமபட்டினம் புதுார் ஏ.டி .காலனியில் பெண்கள் சுகாதார வளாகம் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் பலரும் சிரமப்படுகின்றனர். பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்ணன், ராமபட்டினம்புதூர்.

...................---------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us