/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆக்கிரமிப்பு பிடியில் நீரோடைகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தாராளம்ஆக்கிரமிப்பு பிடியில் நீரோடைகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தாராளம்
ஆக்கிரமிப்பு பிடியில் நீரோடைகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தாராளம்
ஆக்கிரமிப்பு பிடியில் நீரோடைகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தாராளம்
ஆக்கிரமிப்பு பிடியில் நீரோடைகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தாராளம்

நிலத்தடிநீர் பாதிக்கப்படும்
வெள்ளக்காளை, விவசாயி: நீரோடையில் ஆக்கிரமிப்பு செய்தால் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகும் என்பதை அறிந்தும் சிலர் இந்த செயல்களில் ஈடுபடுவதால் ஜம்புலிம்பட்டி பகுதியை சுற்றிய குளங்களுக்கு பத்தாண்டுகளாகவே நீரோட்டம் இல்லாமல் காய்ந்து கிடப்பது பரிதாபமாக உள்ளது. மந்தைகுளம், பிரான்குளத்தை சுற்றிய 100 ஏக்கர் விவசாய நிலங்களும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துமீறிய ஆக்கிரமிப்புக்களால் இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரமும் கெடும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றலில் அலட்சியம்
பரமசிவம், விவசாயி: நீர்நிலை பகுதிகளில் இத்தகைய துணிவான ஆக்கிரமிப்பு என்பது எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பது புதிராக உள்ளது. ஆக்கிரமிப்போடு நிற்காமல் அந்த இடங்களை பட்டா இடங்களாக பாவித்து பயிரிடுவது மாவட்ட நிர்வாகத்தின் மேலுள்ள அலட்சிய போக்கையே பிரதிபலிக்கிறது. ஒருசிலரின் இந்த செயல்களை அதிகாரிகள் கண்டுக்காமல் விட்டால் நாளடைவில் நீர்வழி தடம் கேள்விக்குறியாகி விடும்.
மயில்களை காக்க வேண்டும்
முருகன் விவசாயி:ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை செய்வதற்கு வரும் வருவாய் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்ட ஒருசில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான பணிகள் சம்மந்தமாக எதுவுமே நடக்காதது போல் பணிகள் கிடப்பில் போடப்படுவது என்ன மாயம் என தெரியவில்லை. மயில்களின்நடமாட்டமும் இந்த பகுதியில் அதிகம் உள்ளது. ஆனால் அதன் பாதுகாப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக தெரியவில்லை. அதிகாரிகள் கண்காணித்து மயில்களையும் காக்க வேண்டும்.
மயானத்திலும் ஆக்கிரமிப்பு
முத்துராஜ், விவசாயி: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ஆற்றுவழித்தடம் இருப்பதை கூட ஒருவகையில் சகித்து கொள்ளலாம். ஆனால் பெரியகோட்டை கிராமத்தின் அப்பிநாயக்கன்பட்டியில் உள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி கொண்டு அடைத்திருப்பது ஆன்மாக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மயான வழிப்பாதை அடைபட்டதால் குறுகிய இடத்தில் நான்கடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது. பாறைப்பட்டியிலிருந்த சுடுகாடு ஆக்கிரமிப்பால் வழி இல்லாததால் 30 குடும்பத்தினர் இந்த மயானத்தில்தான் உடல்களை நல்லடக்கம் செய்யும் நிலை உள்ளது. அந்த நீரில் இறங்கி மயானத்தின் நீர்பிடிப்பு பகுதியில் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்தால் அது எப்படி நல்லடக்கமாகும் என தெரியவில்லை. ஆக்கிரமிப்பின் உச்சமாக மயான இடத்தை மறித்துள்ளதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
வில்சன், தாசில்தார், பாலகிருஷ்ணாபுரம் கிழக்கு: நீர் நிலை ஆக்கிரமிப்பு என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகமாகும். தயவின்றிய ஆக்கிரமிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


