ADDED : ஜன 19, 2024 05:27 AM
திண்டுக்கல்: நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை யொட்டி சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதோடு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் நடந்தது. ஏராளமான பெண்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். முக்கரும்புகள் வைத்து பெண்கள் வண்ணக் கோலமிட்டனர். தொடர்ந்து பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது.


