ADDED : அக் 15, 2025 02:57 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கு மனவளக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
செயலாளர் பொன்ராஜ், பொருளாளார் அழகர்சாமி, நிர்வாகிகள் தமிழ்செல்வன், குமார், ரவிச்சந்திரன், மணிகண்டன், பழனிசாமி, நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் மூத்த பேராசிரியர் தாமோதரன் தலைமையில் ஸ்கை யோகா ஆசிரியர்கள் சரவணன், முருகேசன், ரங்கநாயகி, இளங்கோ உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
தாளாளர் பத்மநாபன், தலைமை ஆசிரியர் பாலாஜி, சுப்ரமணியன், பொறியாளர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.


