Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹிந்துக்களே கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறி உள்ளனர் சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

ஹிந்துக்களே கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறி உள்ளனர் சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

ஹிந்துக்களே கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறி உள்ளனர் சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

ஹிந்துக்களே கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறி உள்ளனர் சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

ADDED : ஜூன் 22, 2025 12:32 AM


Google News
திண்டுக்கல்:''ஹிந்துக்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களாக, இஸ்லாமியராக மாறி உள்ளனர்''என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது :கீழடிக்கு புகழ் சேர்த்தது முதல்வர் ஸ்டாலின் தான். கீழடி ஆராய்ச்சி தரவுகளை , தமிழக பண்டைய நாகரிக கலாசாரத்தை மக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்துள்ளது. கண்ணுக்கு தெரியாதவர்களுக்கு சேவை செய்ய தயாராக இல்லை.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்களை சந்திக்கவில்லை. பா.ஜ.,க்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.

மத்திய அரசு என்ன செய்கிறது என அனைவருக்கும் தெரியும். 100 நாள் வேலைத்திட்ட பட்டுவாடாக்கு 4 மாதத்திற்கு பின்பு 2900 கோடி கொடுத்துள்ளனர்.

இன்னும் 1800 கோடி வர வேண்டும்.பா.ஜ.,வை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.,வினர் கடவுள், ஹிந்துக்கள் என இனப்பிரசாரத்தை கையிலெடுக்கிறனர்.

அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிந்துக்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களாக, இஸ்லாமியர்களாக மாறி உள்ளனர்.

இங்கு அனைவரும் ஒன்றுதான். தமிழ் மண்ணில் பா.ஜ., கால்பதிக்க முடியாது. இவர்கள் முருகனுக்காக என்ன செய்தார்கள்.

தி.மு.க., அரசு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளது.

முருகன் பெயரில் கல்லுாரிகள் துவங்கி உள்ளோம். தமிழகத்துக்கான கல்வி நிதியை கூட பா.ஜ., தமிழகத்துக்கு தரவில்லை. இவர்கள் எந்த அடிப்படையில் மக்களை சந்திக்க முடியும். நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் கொள்கை அடிப்படையில் உறுதியாக உள்ளோம். அதில் சந்தேகம் இல்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us