ADDED : அக் 16, 2025 05:09 AM
வடமதுரை: பாகாநத்தம் கிழக்கு மலைப்பட்டி பெருமாள் மகன் ஹரிகிருஷ்ணன் 4 , கொம்பேறிபட்டி மம்மானியூர் கருப்பையா மகன் சபரீஷ்வரன் 7. உறவினர்களான இருவரும் அப்பகுதி தோட்டத்திற்குள் இருந்த பண்ணைக்குட்டையில் குளிக்க சென்றபோது நீரில் முழ்கி இறந்தனர்.
இச்சிறுவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தனது சொந்த நிதியில் தலா ரூ.25 ஆயிரம் வழங்கி னார்.


