/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் நவராத்திரி விழா துவக்கம்; அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது பழநியில் நவராத்திரி விழா துவக்கம்; அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது
பழநியில் நவராத்திரி விழா துவக்கம்; அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது
பழநியில் நவராத்திரி விழா துவக்கம்; அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது
பழநியில் நவராத்திரி விழா துவக்கம்; அக்.,1ல் அம்பு எய்தல் நடக்கிறது
ADDED : செப் 23, 2025 06:39 AM
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது.
இதைதொடர்ந்து பெரியநாயகி அம்மன், சிவபெருமான், சோமஸ்கந்தர், நடராஜர், பரிவார தெய்வங்கள், கோயில் யானை கஸ்துாரிக்கு காப்பு கட்டப்பட்டது.
உச்சிகால பூஜையில் முருகன் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி, உற்ஸவர் சின்னகுமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்பு கட்டப் பட்டது.
விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.
அக்., 1 மதியம் 1:30 மணிக்கு முருகன் கோயிலில் சாயரட்சை பூஜை ,மதியம் 3:00 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட பெரியநாயகி அம்மன் கோயிலை அடைகிறது. இதன் பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட கோதைமங்கலத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய பராசக்தி வேல் முருகன் கோயில் செல்லும் . அங்கு அன்று இரவு அர்த்தசாம பூஜை நடக்கிறது. அக்.1 வரை நவராத்திரி விழா நாட்களில் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.