ADDED : ஜூன் 20, 2025 03:36 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் 14 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் சார்பில் அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., அகாடமி பள்ளியில் என்.சி.சி., பயிற்சி முகாம் நடடந்து வருகிறது.
லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் தலைமையில் ஜூன் 25 வரை நடக்கும் முகாமில் துப்பாக்கிச்சுடுதல், நிலவரைபடப்பயிற்சி, முகாம் கூடாரம் அமைத்தல், 10 விதமான தடைகளைக் கடக்கும் பயிற்சி, களப்பயிற்சி, போர் பயிற்சி, உடல்நலம், சுகாதாரம், ராணுவ நடைப்பயிற்சி, உள்ளிட்டவைகளுடன் தேர்வும் நடக்கிறது. என்.சி.சி., ராணுவ குழும அதிகாரி விஜயக்குமார் முகாமை ஆய்வு செய்து பாராட்டினார். பள்ளி தாளாளர் சிவராஜ், முதல்வர் சண்முகவேல் உடனிருந்தனர். திண்டுக்கல், பழநி, தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், மதுரை, பகுதிகளை சேர்ந்த 500 என்.சி.சி., மாணவர்கள் பயிற்சி பெறுகிறனர்.