Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

ADDED : செப் 16, 2025 04:50 AM


Google News
தொழிற் நிலையங்களில் சேர அழைப்பு

திண்டுக்கல்: 2025ல் அரசு ,தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in செப். 30 வரை விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் - 99652 91516, மகளிர் - 94990 55763, ஒட்டன்சத்திரம் - 90251 55088, குஜலியம்பாறை - 96008 27733, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் - 0451 -2970 049 ல் அணுகலாம்.

அம்பேத்கர் விருதுக்கு அழைப்பு

திண்டுக்கல்: மாவட்டத்தில் 2025 ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/annalambedkar_ award_applnform_t_290824.pdf (or) https://tinyurl.com/ambedkaraward அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெறலாம். விண்ணப்பங்கள் செப்.30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி

திண்டுக்கல்: ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி ., பொது நர்சிங், மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ (மெக்கானிக்கல், பயோமெடிக்கல், மின் மற்றும் மின்னணு பொறியியல்) பி.டெக். தகவல் தொழில்நுட்பம் ஆகியபடிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். வயது 21 முதல் 35 , ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமும் விடுதியில் தங்கிபடிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் ஏற்கப்படும். விரும்புவோர் www.tahdco.com ல் பதிவு செய்யலாம்.

மக்கள் சந்திப்பு பிரசாரம்

தொப்பம்பட்டி: தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ,அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. ஓய்வூதியதாரருக்கு முறையான பென்ஷன் வழங்கப்படும் என்பதை நிறைவேற்ற வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி ரூ.3850 காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொப்பம்பட்டி வட்டார கிளை பொருளாளர் ஜோதிமணி, கிளை இணைச் செயலாளர் சகுந்தலா கலந்து கொண்டனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us