ADDED : செப் 26, 2025 02:16 AM
மரக்கன்று நடல்
ஒட்டன்சத்திரம்: வடகாடு ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. வடகாடு அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் வனத்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனம் கிருபா பவுண்டேஷன், தன்னார்வலர்கள் இணைந்து நாவல் மர கன்றுகள் நட்டனர் . மாணவர்கள், பொதுமக்களுக்கு நாவல் பழத்தின் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா, வனவர் சின்னத்துரை, மற்றும் கிருபா பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் தினம் அனுசரிப்பு
பகத்சிங் பிறந்த நாள், பன்டிட் தீனதயாள் பிறந்தநாள், சுதந்திர போராட்ட தியாகி செண்பக ராமன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி குண்டுவீசிய வரலாற்று நாள் ஆகியவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் அருணகிரி, பத்மநாபன், நாகரத்தினம் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை பேரவை நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.
உறுதிமொழி ஏற்பு
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில், துாய்மையே சேவை என்பதை வலியுறுத்தி அம்ரித் சரோவர் பணித்தளங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாண்மை அலகு அதிகாரி சிவப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுகாதார ஊக்குனர் பாத்திமாபிவி, பணித்துணையாளர்கள் மகேஸ்வரி, லட்சுமி, துாய்மைகாவலர்கள் கலந்து கொண்டனர்.