Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/100க்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆதங்கம்

100க்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆதங்கம்

100க்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆதங்கம்

100க்கு மேல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆதங்கம்

ADDED : ஜன 21, 2024 03:58 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: ' 100க்கு மேல் மனுக்கள் கொடுத்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,' என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தங்களது ஆதங்கத்தை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.தோட்டக்கலைத் துணை இயக்குநர் பெருமாள்சாமி,வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா,கலெக்டர் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ராணி முன்னிலை வகித்தனர்.

வி வசாயிகள் விவாதம்


பெருமாள்,திண்டுக்கல்: வனவிலங்குகள், காட்டு பன்றிகளால் விவசாயம் பாதிக்கிறது. ஊருக்குள் காட்டுப் பன்றிகள் வருகிறது. பொதுமக்களும் அச்சமடைகின்றனர்.

கலெக்டர்: வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சவடமுத்து,நாகையக்கோட்டை: நாகையக்கோட்டை பகுதி கல்லுக்குளம் நீர் வரத்துப் பாதை 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதுவரை 100க்கு மேல் மனுக்கள் கொடுத்திருக்கிறேன். ஒரு நடவடிக்கையும் இல்லை.

ராமராஜ்(கலெக்டர் நேர்முக உதவியாளர்)): மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரப்பன், விவசாயிகள் சங்கத் தலைவர் குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதை முறைப்படுத்த வேண்டும். அதிகமான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு கொடுத்துள்ளேன். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கலெக்டர்: ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமசாமி,குடகனாறு பாதுகாப்புச் சங்க தலைவர்,திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி, தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் குடகனாற்றில் கலக்கிறது. ஆற்றுநீரில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது. கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன், மேல்மலை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர், கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் கொடைக்கானல் வன விலங்கு சரணாலயத்தின் உள்பகுதியாகவும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று சூழல் மண்டலமாகவும் உள்ளது. இதனால் எங்கள் கிராமங்களைச் சுற்றிய அரசு நிலங்கள் வன நிலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் எங்கள் பகுதி கால்நடைகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் பாதிக்கப்படும். அரசு நிலங்களை மேய்ச்சல் நிலமாக வகைப்படுத்த வேண்டும்.

அசோகன்,பாரதிய கிஷான் சங்க நிர்வாகி: கொடைக்கானலில் மித வெப்பமண்டல குளிர் பிரதேச தோட்டக்கலைப் பயிர்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் இழுபறியாக உள்ளது. பேத்துப்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை மகத்துவ மையம் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அழகியண்ணன்,திண்டுக்கல்: சின்ன வெங்காயம் விலை குறைவாக உள்ளது. அரசே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.

ராமச்சந்திரன்,சாணார்பட்டி: பால் கொள்முதல் விலை உயர்வு செய்த பின்பும் அதற்கான தொகை இதுவரை வழங்கவில்லை.சாணார்பட்டி கோணப்பட்டி ரோடு ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.

கலெக்டர்: பணம் தற்போது வழங்கப்படுகிறது. ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

துரைசாமி,திண்டுக்கல்: வரதமாநதி கால்வாய் திறந்து விட வேண்டும். அப்பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

கலெக்டர்: உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us