/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பட்டியல், பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம் பட்டியல், பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
பட்டியல், பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
பட்டியல், பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
பட்டியல், பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
ADDED : மார் 21, 2025 02:51 AM
திண்டுக்கல்,:''பட்டியல், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து சட்டசபையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானிய கோரிக்கை விவாத நாளுக்கு முன் சென்னையில் போராட்டம் நடக்க உள்ளது,'' என, திண்டுக்கல்லில் தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா கூறினார்.
அவர் கூறியதாவது : தமிழகத்தில் பட்டியலினம், பழங்குடியின மக்கள் மீது தாக்குதல், படுகொலை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 1097 வன்முறை சம்பங்கள் நடந்துள்ளது. படிக்கும் மாணவர்கள் வரை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் படுகொலைகள் நடந்துள்ளன. திண்டுக்கல் அருகே மைனர் தலித் பெண்களை கட்டாயப்படுத்தி சிலர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். மாங்கரையில் பட்டியின மக்கள் நால்வர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழங்க வேண்டிய இழப்பீடு, ஓய்வூதியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறையினர் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இத்துறை மாவட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்தில் பட்டியல், பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்களை கண்டித்து சட்டசபையில் ஆதிதிராவிடர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.