ADDED : செப் 04, 2025 04:32 AM
வடமதுரை: வடமதுரை பி.கொசவபட்டி ஊராட்சி சுந்தரபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பகுதியின் கீழே செல்லும் குடிநீர் பாதையில் ஏற்பட்ட உடைப்பால் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியான மக்கள் திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் மறியலில் ஈடுப்பட்டனர். வடமதுரை போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.