/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீண்ட நேரம் ரயில்வே கேட்அடைப்பு; மக்கள் அவதி நீண்ட நேரம் ரயில்வே கேட்அடைப்பு; மக்கள் அவதி
நீண்ட நேரம் ரயில்வே கேட்அடைப்பு; மக்கள் அவதி
நீண்ட நேரம் ரயில்வே கேட்அடைப்பு; மக்கள் அவதி
நீண்ட நேரம் ரயில்வே கேட்அடைப்பு; மக்கள் அவதி
ADDED : மார் 21, 2025 04:25 AM
பழநி : பழனி புது தாராபுரம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டில் காலை ,மாலை நேரங்களில் அதிக நேரம் பொதுமக்கள் காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர்.
பழநியை புது தாராபுரம் ரோடு சத்யா நகர் பகுதி ரயில்வே கிராசிங் உள்ளது. இப்பகுதியில் ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும் போது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. காலை, மாலை நேரத்தில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பள்ளி, அலுவலகம், கல்லுாரி செல்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. உயிருக்கும் போராடும் நோயாளிகள் நிலைமை சிரமத்திற்கு உள்ளாகிறது. இங்கு மேம்பாலப் பணிகளை தீவிர படுத்த கோரிக்கை எழந்துள்ளது.