ADDED : பிப் 12, 2024 05:29 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கரூர் பழைய ரோட்டில் ஜி.டி.என் .கலை கல்லுாரி அருகில் ஆர்.கே. ஏ.சி மஹால் திறப்பு விழா நடந்தது. ஆர்.எம். பிரதர்ஸ் ஆர்ட்ஸ் விளம்பர ஏஜென்சி உரிமையாளர்கள் ராஜசேகரன் - காமாட்சி,பரத் ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றனர். எம்.எல்.ஏ.,செந்தில்குமார் திறந்து வைத்தார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநிலத் துணைச் செயலாளர் அருண், திண்டுக்கல் யூனியன் சேர்மன் ராஜா,கே.பி.கன்ஸ்ட்ரக்சன் இயக்குனர் ஜனகர், எஸ்.கே.சி. சண்முகவேல், ஸ்ரீ வாசவி தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் ரவி, குருமுகி பள்ளி நிர்வாக சேர்மன் செந்தில்குமார், ஹிந்துஸ்தான் உரிமையாளர் நடராஜன், மஹாலை வடிவமைத்த இன்ஜினியர் டேவிட் பிராங்க்ளின், ஆதவன் இன்டீரியர் உரிமையாளர் பாண்டியன், எலைட் விண்டோ நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார்,எஸ்.கே. ரெடிமிக்ஸ் சிவக்குமார், ஏ.எம். பில்டர்ஸ் இயக்குனர் சித்தாண்டி, இரும்பு வியாபார சங்கத் தலைவர் சிவசண்முகராஜன், ஏ.சி.எல்.எஸ். இயக்குனர் செண்பகமூர்த்தி, மதர்லேண்ட் மார்பைஸ் உரிமையாளர்கள் ஸ்டீபன், விக்கி பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது,500 பேர் கலந்து கொள்ளும் நவீன வசதி கொண்ட திருமண அரங்கம்,டைனிங் ஹால் முழுமையான ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதியுடன் குறைந்த விலையில் திருமண,அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விடப்படும் என்றார்.