ADDED : செப் 14, 2025 03:52 AM

பழநி:அக்கமநாயக்கன்புதுாரை சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் குமரகுரு 40. இவரது தோட்டம் செங்குளம் அருகே உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள சந்தன மரத்தை சிலர் வெட்டி கடத்தினர்.
இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இருந்த சந்தன மரம் ஒன்றும் வெட்டப்பட்டது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.