/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம் ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்

டாஸ்மாக்கால் அவதி
மோகன், டிரைவர் : தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலையில் தடுமாறும் நிலை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட குறுக்கு சந்து வழிகள் சீரமைக்காமல் உள்ளது. வீடுகளில் குப்பையை துாய்மை பணியாளர்கள் சரிவர வாங்குவதில்லை. மாறாக பணம்வசூலிக்கின்றனர். குப்பைத் தொட்டியும் இல்லை. சாக்கடை துார்வாரப்படாமல் உள்ளது. தெருக்கள் புதர் மண்டி உள்ளன. பொது கழிப்பறை வசதியின்றி அவதியுறும் நிலை உள்ளது. கவுன்சிலர் வார்டிற்கு வராத நிலையால் வளர்ச்சி பணிகள் பாதித்துள்ளன. குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
ஆற்றில் இறைச்சி கழிவுகள்
முருகேஷ்வரி, வியாபாரி : குடியிருப்பு அருகில் செல்லும் ஆற்றில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பர்னியல் ரோட்டில் உள்ள பாலத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வார்டில் வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலரிடம் கேட்கும் நிலையில் நகராட்சியில் நிதியில்லை என்கிறார்.
காட்டுமாடு வரும் வழிகளில் கேட்
பிரபா ஷாமிலி, கவுன்சிலர், (தி.மு.க.,): ரூ.4 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. பர்னியல் ரோட்டில் பாலம் பணி முழுமை பெறாமல் உள்ளது. இது குறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் புகார் அளித்து பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.