/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காஸ் கசிவால் 'தீ' விபத்து மாணவியால் உயிர்சேதம் தவிர்ப்பு காஸ் கசிவால் 'தீ' விபத்து மாணவியால் உயிர்சேதம் தவிர்ப்பு
காஸ் கசிவால் 'தீ' விபத்து மாணவியால் உயிர்சேதம் தவிர்ப்பு
காஸ் கசிவால் 'தீ' விபத்து மாணவியால் உயிர்சேதம் தவிர்ப்பு
காஸ் கசிவால் 'தீ' விபத்து மாணவியால் உயிர்சேதம் தவிர்ப்பு
ADDED : ஜூன் 28, 2025 11:48 PM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில்  வீட்டில் சமையல் செய்யும்போது  காஸ் கசிவால் ஏற்பட்ட  தீ விபத்தில்   கல்லுாரி மாணவியால்  உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷன்.
நேற்று காலையில்  இவரின் வீட்டில் சமையல் செய்யும்போது  காஸ்  கசிந்துள்ளது.   வீட்டில் இருந்தவர்கள் பதறியபோது வெங்கடேஷனின் மகள் விஷ்ணுபிரியா 20, அடுப்பை அணைத்துவிட்டு வீட்டில் இருந்த அனைவரையும் பத்திரமாக வெறியேற்றினார்.   வீடு முழுவதும் பரவிய காஸ்  சில நிமிடங்களில் தீ விபத்தாக மாறி பற்றி எரிந்தது.
மாவட்ட தீயணைப்பு உதவி  அலுவலர் மயில்ராஜூ, முன்னணி வீரர் புகழேந்தி தலைமையிலான  வீரர்கள்   தீயை 25 நிமிடங்கள் போராடி அணைத்தனர்.   விஷ்ணுபிரியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு அதிகாரிகள்  விசாரித்த போது,   பள்ளி ,கல்லுாரிகளில் அவசரகாலத்தில் தீ தடுப்பு ஒத்திகை குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்   கிடைத்த அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது,என்றார்.


