ADDED : மே 12, 2025 06:10 AM
வடமதுரை: வடமதுரை சிங்காரக்கோட்டையில் ஸ்ரீபோரம்மாள், பெருமாள், பாப்பம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம்,
முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளியங்கிரி, வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் பங்கேற்றனர். ஒக்கலிகர் எம்மேனவாரு குல பங்காளிகள் செய்திருந்தனர்.