/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டெங்கு ஒழிப்பு பணிகளை மக்களிடம் கேட்டறிந்த கமிஷனர்டெங்கு ஒழிப்பு பணிகளை மக்களிடம் கேட்டறிந்த கமிஷனர்
டெங்கு ஒழிப்பு பணிகளை மக்களிடம் கேட்டறிந்த கமிஷனர்
டெங்கு ஒழிப்பு பணிகளை மக்களிடம் கேட்டறிந்த கமிஷனர்
டெங்கு ஒழிப்பு பணிகளை மக்களிடம் கேட்டறிந்த கமிஷனர்
ADDED : ஆக 05, 2024 06:25 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் டெங்கு ஒழிப்பு பணிகள் எல்லா பகுதிகளிலும் முறையாக நடக்கிறதா என கமிஷனர் ரவிச்சந்திரன் வார்டு வார்டாக ஆய்வு செய்து பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
திண்டுக்கல்லில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீர் பல இடங்களில் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் 48 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் 24 குழுக்களாக பிரிந்து கொசு ஒழிப்பு பணி, கொசுமருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகைள் ஈடுபட்டனர். வீடுகளில் தண்ணீர் தேங்கும் சிமென்ட் தொட்டிகள், டிரம்கள்,பாத்திரங்கள்,தேங்காய் ஓடுகள், காலி டப்பாக்கள், பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சோதனை நடத்துகின்றனர். இப்பணிகள் முறையாக நடக்கிறதா என நேற்று மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியில் ஆய்வு செய்து துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது பொது மக்களை சந்தித்த அவர், கீழ்நிலை தொட்டிகள்,கிணறுகளில் மீன்களை வளர்ப்பதால் கொசுபுழு உற்பத்தியை தடுக்கலாம். காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு தலைவலி, வாந்தி,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை அணுகி முறையாக சிகிச்சை பெற வேண்டும் என்றார்.