/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/''தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்'': காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி ''தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்'': காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி
''தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்'': காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி
''தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்'': காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி
''தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்'': காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி
ADDED : ஜூலை 26, 2024 05:34 PM

திண்டுக்கல்: '' தி.மு.க., கூட்டணியில் இருக்க நாம் கூனி, குறுகிப் போக தேவையில்லை'' என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேசியது சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பெரியசாமி, ''தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள்''எனக் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கருத்து வேறுபாடுகள் வரலாம். இண்டியா கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளோம். கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. வாதங்களுக்கு வாதம், அரசியலுக்கு அரசியல் என எல்லாவற்றையும் சந்தித்து வந்த இயக்கம் தி.மு.க.
அண்ணாத்துரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் உழைப்பால் உயர்ந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தற்போது கல்விக்காக அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பழநியில் கிரிவலப் பாதையை மக்களின் வசதிக்காக ஒழுங்குபடுத்தி உள்ளனர். மற்ற தெருக்களை நிர்வாகம் சுத்தமாக, சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை விரும்புகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி முறைகேடு தொடர்பாக விசாரணை நடக்கிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு தவறு யார் செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.