/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ., பிரமுகர் கொலையில் நீதிமன்றத்தில் இருவர் சரண் பா.ஜ., பிரமுகர் கொலையில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
பா.ஜ., பிரமுகர் கொலையில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
பா.ஜ., பிரமுகர் கொலையில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
பா.ஜ., பிரமுகர் கொலையில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
ADDED : ஜூலை 05, 2025 02:34 AM
திண்டுக்கல்:பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
திண்டுக்கல், மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 39; பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகியான இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிந்த போது, டூ - வீலர்களில் வந்த ஆறு பேர் கும்பல் பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் வெட்டிக்கொலை செய்து தப்பியது.
டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை கும்பலை போலீசார் தேடும் நிலையில், கொலையில் தொடர்புடைய குட்டப்பாறைப்பட்டியை சேர்ந்த சதீஷ், கஜேந்திரன் ஆகியோர் திண்டுக்கல் மூன்றாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
பா.ஜ., நிர்வாகி பாலகிருஷ்ணன் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், தமிழக பா.ஜ., மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தும்.