ADDED : ஜூன் 20, 2025 03:40 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில் தினமலர் செய்தி எதிரொலியாக பணிகள் துவங்கின.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2024 ல் ரூ.3.16 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவங்கின.
இப்பணிகள் தற்போது முழுமை பெறாது தரைப்பகுதியில் பதிக்கப்பட்ட கற்கள் ஒழுங்கற்று இடைவெளியுடன் காணப்பட்டது.
தரைப்பகுதியை பார்வையிடும் தொலைநோக்கி மைய பகுதியில் அமைத்த கற்கள் சிதறிய நிலையில்முழுமை பெறாத வேலி , டிக்கெட் வழங்கும் நுழைவு பகுதியில் பல்லாங்குழி பள்ளங்கள் என இயற்கை அழகை ரசிக்க வருகை தரும் பயணிகள் அரைகுறை பணிகளால் நாள்தோறும் தடுமாறி விபத்தில் சிக்கினர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதை தொடர்ந்து கிரைனைட் கற்கள் பதிக்கும் பணி நடக்கும் நிலையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ள பள்ளங்கள் சீர் செய்யப்படுகிறது. இதோடு வேலி அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவங்கி உள்ளன.
எஞ்சியப் பணிகளும் முழுவீச்சில் நிறைபெறும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் நிம்மதியடைவார்.