/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
ADDED : மார் 21, 2025 04:34 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் சிறுமலை தென்மலையை சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் 22.
2024 ல் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி லட்சுமணனுக்கு 8 ஆண்டு சிறை ,ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.