Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பண்ணாரி குண்டம் விழாவில் அன்னதானம் கொடுக்கஉணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுவது கட்டாயம்

பண்ணாரி குண்டம் விழாவில் அன்னதானம் கொடுக்கஉணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுவது கட்டாயம்

பண்ணாரி குண்டம் விழாவில் அன்னதானம் கொடுக்கஉணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுவது கட்டாயம்


ADDED : ஏப் 05, 2025 01:53 AM

Follow on Google

ADDED : ஏப் 05, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ணாரி குண்டம் விழாவில் அன்னதானம் கொடுக்கஉணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுவது கட்டாயம்

ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், அன்னதானம் வழங்குதல், நீர் மோர் பந்தல் உட்பட உணவு பொருள் வினியோகம்,

விற்பனைக்கு, உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற வேண்டும்.இதுபற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம், 24ல் தொடங்கி வரும், 14 வரை நடக்கிறது. வரும், 8ல் குண்டம் விழா நடக்கிறது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கில் தரிசனம் செய்து, தீ மிதித்து வழிபாடு செய்கின்றனர்.

பக்தர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் அன்னதானம், நீர் மோர், குளிர்பானம், உணவு பொருள் விற்கின்றனர். உணவு பொருள் விற்பனை ஸ்டால்களும் அமைக்கின்றனர். இவற்றுக்கு கட்டாயமாக உணவு

பாதுகாப்பு துறையில் உரிமம், பதிவுச்சான்று பெற வேண்டும். இப்பதிவு சான்றிதழை, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி 'Foscos' என்ற இணைய தளம் மூலம் பெறலாம். சந்தேகத்துக்கு, 90470 99621 ,94440 42322 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வின்போது, இவற்றை காண்பிக்க வேண்டும். தரமற்ற உணவு விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap