/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்
ADDED : மார் 16, 2025 01:51 AM
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்
காங்கேயம்:காங்கேயம் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதி-2023ன்படி, காங்கேயம் நகராட்சியில், வணிக நிறுவனத்தின் பெயர், முதலில் தமிழில் இடம் பெற வேண்டும்.
வேறு மொழி பயன்படுத்த விரும்பினால், ஆங்கிலத்தில் இரண்டாவதாக இடம்பெற செய்ய வேண்டும். தமிழுக்கான அளவு ஆங்கில மொழிக்கான அளவு மற்றும் பிற மொழிகளுக்கான அளவு முறையே 5:3:2 என்று அமைய வேண்டும். நகராட்சி பகுதியில் இந்த விதிமுறையை அனைத்து கடை, நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.