ADDED : மார் 15, 2025 02:52 AM
சமுதாய வளைகாப்பு விழா
பவானி:தி.மு.க., சார்பில் பவானியில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதில், ௧௦௦ கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் தலைமை வகித்தார். வளைகாப்பை தொடர்ந்து ஐந்து வகையான உணவு பரிமாறப்பட்டது. நிகழ்வில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி, தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், மற்றும் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.