/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம் கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம்
கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம்
கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம்
கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம்
ADDED : மார் 16, 2025 01:27 AM
கோவிலில் தானாகவே ஆடியஊஞ்சலால் பக்தர்கள் பரவசம்
சென்னிமலை:சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. மாரியம்மன் சன்னதி எதிரே ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது தானாகவே ஆடுகிறது. பக்தர்கள் ஆட்டுவது போல் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் ஆடியுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனராம்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஊஞ்சல் அமைந்துள்ள பகுதியில் காற்று வீச வாய்ப்பில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களாக தானாகவே ஊஞ்சலாடுவது அதிசயமாக உள்ளது. இதையறிந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஊஞ்சலை தொட்டு வணங்கி செல்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.