வேலம்பட்டி பள்ளிக்கு சமையலர் நியமனம்
வேலம்பட்டி பள்ளிக்கு சமையலர் நியமனம்
வேலம்பட்டி பள்ளிக்கு சமையலர் நியமனம்
ADDED : செப் 25, 2025 02:11 AM
அந்தியூர், பர்கூர் வேலம்பட்டி துவக்கப்பள்ளிக்கு, புதிய உதவி சமையலர் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில், தமிழக-கர்நாடக எல்லையில், வேலம்பட்டி, அரசு துவக்கப்பள்ளியில் தற்காலிகமாக அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் மதிய உணவு சமையலராக பணிபுரிந்தார். போதிய சம்பளம் வழங்காததால், 15 நாட்களாக இவர் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கு படிக்கும் 19 மாணவ, மாணவியர் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று காலை வேலம்பட்டி துவக்கப்பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில், பர்கூர் அருகேயுள்ள பெஜ்ஜில்பாளையம் நடுநிலைப்பள்ளியில் உதவி சமையலராக பணியாற்றும் வனிதா, வேலம்பட்டி துவக்கப்பள்ளிக்கு, நிரந்தர உதவி சமையலராக உடனடியாக நியமிக்கப்பட்டார்.இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் கூறுகையில்,'' சமதள பகுதி
யில் பள்ளி இருந்தால், நிரந்தர பணியாளர் நியமிப்பதிலும், மதிய உணவு வழங்குவதிலும் சிக்கல் இல்லை. மலை கிராமம் என்பதால், நிரந்தர பணியாளர் போட முடியாமல் பிரச்னை தொடர்கிறது. இருப்பினும் இப்பள்ளிக்கு உடனடியாக, பெஜ்ஜில்பாளையத்தில் பணிபுரிந்த வனிதா என்ற உதவி சமையலர், நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்,'' என்றார்.