காலாவதி குளிர்பானம்விற்றதால் அபராதம்
காலாவதி குளிர்பானம்விற்றதால் அபராதம்
காலாவதி குளிர்பானம்விற்றதால் அபராதம்
ADDED : மார் 18, 2025 02:16 AM
காலாவதி குளிர்பானம்விற்றதால் அபராதம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டுவதால் ஜூஸ் உள்ளிட்ட குளிர்பான விற்பனை அதிகம் நடக்கிறது. அவை தரமாக, சுகாதாரமாக விற்பனை செய்யப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்து வருகின்றனர். இதற்காக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் நான்கு சிறப்பு குழுவை அமைத்துள்ளனர். இதில், 121 கடைகளில் ஆய்வு செய்ததில், 12 குளிர்பான கடைகளில் சுகாதாரம், தரம் இல்லாததும், காலாவதி குளிர்பானத்தை விற்பனை செய்ததை கண்டறிந்து. ஒவ்வொரு கடைக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.