ADDED : மார் 20, 2025 01:41 AM
தொழிற்சாலை நிறுவவிரைவாக அனுமதி
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் நிறுவவும், இயந்திரங்கள் நிறுவவும், விரிவாக்கத்துக்கும் அனுமதி பெற வேண்டி உள்ளது. விண்ணப்பத்துடன், தனி நபர் ஓட்டுனர் உரிமம், தனி நபர் வங்கி கணக்கு புத்தகம், தனி நபர் அஞ்சலக அட்டை என உரிய ஆவணங்கள், திட்ட வரைவுடன் வழங்கி, ஆன்லைனில் விண்ணப்பித்து கலெக்டரிடம் சமர்பிக்க வேண்டும். உரிய கட்டணத்தை செலுத்தினால், அந்தந்த பஞ்.,கள் மூலம் விரைவான நடவடிக்கையுடன், உரிய அனுமதியும் வழங்கப்படும் என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா
தெரிவித்துள்ளார்.


