ADDED : அக் 17, 2025 01:24 AM
அந்தியூர், பர்கூரை அடுத்த ஊசிமலை பசுவேஸ்வரர் கோவிலில், ஏழை மலைவாழ் மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் செண்பகமன்னார் செண்டலங்கார ஜீயர், 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார். முன்னதாக அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஜீயருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பா.ஜ., பிரசார அணி மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் பற்குணன், மாவட்டத் துணைத் தலைவர் உத்தரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


