ADDED : மே 12, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்தாராபுரத்தை அடுத்த செலாம்பாளையம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியாண்டி, 28; இவரது மனைவி அஞ்சலி, 25; முனியாண்டி அடிக்கடி மது அருந்தி விட்டு வருவதால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்த முனியாண்டி மனைவியிடம் தகராறு செய்தார். சிறிது நேரத்தில் மனைவி அருகே உள்ள குழாயில் குடிநீர் பிடிக்க சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கூரையில் சேலையால் துாக்கிட்டு நிலையில் முனியாண்டி சடலமாக தொங்கினார். புகாரின்படி அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
